நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள  தாலிக்கால் கிராமத்தில், 15 அடி உயரமுள்ள வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் போன்ற ஒரு திரவம் வெளிவந்துள்ளது. அப்பகுதி வழியாக சென்ற நபர்களின் மீது இந்த வேப்பமரத்தின் பாலானது வழியத் தொடங்கியது.



வெப்ப மரத்தில் இருந்து பால் வெளியாவதை கண்டு வியப்படைந்த அப்பகுதி மக்கள், வேப்பமரத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் பாலானது இனிப்பாக இருந்ததாக கூற இத்தகவல் அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியது. இதனையெடுத்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதில் குவிந்த நிலையில் வேப்பமரத்திற்கு சேலை கட்டி, மாலை அணிவித்து பூஜை செய்ததுவன், பொங்கல் வைத்து படைய இட்டு கிராம மக்கள் பூஞ்சையில் ஈடுபட தொடங்கினர். 



வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?


வேப்ப மரத்தில் பால் வடிவது தொடர்பாக வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவரிடம் பேசும்போது, பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை, வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் நேரத்தில் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால் வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டும். இதனால் மரத்திலுள்ள மாவுச்சத்து மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு பாலாக வடியும்.


அவ்வாறு வடியும் வேப்பமரத்தின் பாலானது இனிப்பானதாக இருக்கும். மரத்தில் நீரின் அளவு குறையும்போது, பால் வடிவது நிற்கும் எனவும் இது வேப்பமரத்தின் இயல்பான தன்மை எனவும் ’வேப்பமரத்தில் அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே’ என கூறினார்.