திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த உள்ள அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் வயது (38) இவர் தார் சாலை அமைக்கும் கூலி தொழிலாளி, இவருடைய மனைவி சுகன்யா வயது (30) இவர்களுடைய மகன் பிரசன்னதேவ் வயது (8), மகள் ரித்திகா வயது (6). இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளில் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் பூபாலன், சுகன்யா இடையே கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சுகன்யா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவாராம். அவரை பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் சாலை அமைக்கும் பணிக்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். 


 




அப்போது நேற்று விடுமுறை நாள் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரசன்னதேவ், ரித்திகா வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ரித்திகா அதிகமாக சத்தம் போட்டுள்ளார்.அப்போது தாய் சுகன்யா, பலமுறை மகளை சத்தம் போடாதே என கூறியுள்ளார். ஆனால் ரித்திகா கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, அருகில் இருந்த கரும்பை எடுத்து ரித்திகாவை அடித்துள்ளார்.இதில் தலையின் பின்பகுதியில் அடி விழுந்தததால் ரித்திகா மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதிர்ச்சியடைந்த தாய் சுகன்யா, உடனடியாக ரித்திகாவை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுார். ஆனால் வழியிலேயே ரித்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


 




இதனால் கதறி அழுத தாய் சுகன்யா, மருத்துவமனைக்கு செல்லாமல் ரித்திகாவின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் கணவர் மற்றும் உறவினர்களுக்கு பயந்து ரித்திகாவின் சடலத்தை கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து பூபாலன் விரைந்து வந்து மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெறையூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து, ரித்திகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சுகன்யாவை கைது செய்தனர். பின்னர் சுகன்யாவை, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில்  உள்ள பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சசிகலாவும் ஓபிஎஸ்க்கு பச்சை கொடி: அதிமுக அரசியலில் ஏற்படும் அதிரடி திருப்பங்கள்