பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு, பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு,கஸ்டாலின் தொடங்கி வைத்தார், திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1627 நியாயவிலை கடைகள் மூலமாக 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்: தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் வழியில் நம் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 21 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கொண்டுவந்தது திராவிடம், போக்குவரத்து போன்றவற்றை தேசிய உடைமை ஆக்கியது திராவிடம், உலகிலேயே பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொண்டுவந்தது திராவிடம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை பெற்று தந்தது திராவிடம் ஆகவேதான் தற்பொழுது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video: TVS XL வாகனத்தை பேட்டரி வாகனமாக மாற்றிய விவசாயி - எவ்வுளோ மையிலேஜ் தருதுன்னு தெரியுமா?
தமிழக மக்களுக்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிற முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசு ஆணை பிறப்பக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் முதலிடம் பெற்றுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொண்டு கொரோனா இல்லாத திருவண்ணாமலை மாவட்டம் இருக்க வேண்டும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு,பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப் , சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், ஆகியோ கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- WATCH VIDEO| வாகனங்களை ஏலம் எடுக்க அலை மோதிய கூட்டம் - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்