Trichy Power Cut (18.08.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 18 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.

திருச்சி மாவட்டத்தில் நாளை  (ஆகஸ்ட் 18) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.

நாளைய மின் தடை எங்கே?

எடமலைப்பட்டிபுதூர்

அன்பு என்ஜிஆர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா என்ஜிஆர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்ஜிஆர், கேஆர்எஸ் என்ஜிஆர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம்

முசிறி

முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி

மன்னார்புரம்

மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் க்ளினி, கே.ஜி.சி.

திருச்சி நகரம்:

சென்ட்ரல்பஸ்டாண்ட், வோக்ரோட், கன்டோன்மென்ட், உக்டிமலை, கல்லாங்கதுராமலிங்க என்ஜிஆர், கலெக்டர் ஆஃப் ஆர்டி, பாத்திமா என்ஜிஆர், வாலஜார்ட் குமரன் என்ஜிஆர், மருத்துவமனை, லிங்கம் என்ஜிஆர், ப்ரோமினாண்ட் ஆர்டி, பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் என்ஜிஆர்.

முன்னெச்சரிக்கை:

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை முன்கூட்டியே முடிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.