Trichy Power Shutdown: ஸ்ரீரங்கத்தில் நாளை(07-02-2026) மின் தடை! திருச்சி மக்களே அலர்ட்! முழு விவரம்
Trichy Power Outage: திருச்சி மாவட்டத்தில் நாளை (07-02-2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சமயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

Trichy Power Shutdown: திருச்சி மாவட்டத்தில் நாளை (07-02-2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். . இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
நாளை எங்கெல்லாம் மின் தடை?
சமயபுரம்
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்
புதுநத்தம்
காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்,
அம்பிகாபுரம்
அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்.
ஸ்ரீரங்கம்
மேலூர், நெடுந்தெரு, சாலை, நெல்சன் சாலை, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாத்தாச்சாரியார் கார்டன்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.























