திருச்சி மாநகர காவல் துறை ஆணையாக காமினி பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மாணவர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநகர் பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள வருகை பதிவேடு மற்றும் புகார் அளிக்கும் பொதுமக்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் பெறப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை கால தாமதம் படுத்தாமல் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்ற சம்பவங்களை ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழஙகினார்.
இந்நிலையில் பெறப்படும் புகார் மனுக்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில், வாரந்தோறும் காவல்துறை சார்பாக மக்கள் குறைத்திருக்க கூட்டம் நடத்தப்படும் என காவல்துறை ஆனையார் காமினி தெரிவித்தார். அதன்படி கடந்த சில மாதங்களாக வாரந்தோறும் பொது மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக முகாம் உங்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்படும் அணுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் அன்மையில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கே.கே.நகா் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் காமினி முகாமிற்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 26 மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது தீர்வுகாண அறிவுறுத்தினார்.மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வா் முகாம், முதலமைச்சாின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநாிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 432 மனுக்களில், 290 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 142 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 11 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த 373 மனுக்களில் 128 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், போலீஸ் துணை கமிஷனர் தெற்கு மற்றும் வடக்கு, காவல் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.