Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student Minister Ramesh: திருச்சியில் செவிலியர் மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுவது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Trichy Student Minister Ramesh: திருச்சியில் செவிலியர் மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்தது தொடர்பாக தற்காலிக நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவி உயிரிழப்பு - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதில், செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி செவிலியர் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் பங்கேற்ற அவர்களிடம் அமைச்சர் ரமேஷ் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மாணவிக்கு சிகிச்சை கொடுத்தவர்கள், அவர்களுக்கு யாரால் என்ன இடையூறுகள் ஏற்பட்டது போன்ற எல்லா விவரங்களையும் மாணவிகள் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது உடனடியாக தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், சென்னையில் இருந்து சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் வந்து விசாரணை செய்வார்கள். அதன் முடிவில் ஏதேனும் தவறுகள் நடந்து இருந்தால் பாரபட்சம் இன்றி அதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனை ஏற்று மாணவிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்” என அமைச்சர் விளக்கமளித்தார்.
மாணவி பலியான விவகாரம் - நடந்தது என்ன?
பிரச்னை என்ன என்பது குறித்து விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு, “மூக்கு எலும்பு பிரச்னை தொடர்பாக அறுவை சிகிச்சைக்காக மாணவி வந்துள்ளார். அவருக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளனர். அதைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மாணவிகள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் வேறு ஏதோ மர்மம் உள்ளது என்கின்றனர். இதன் காரணமாகவே விரைவில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அந்த குழு மூலம் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, மாணவிகள் சொல்வது போல் ஏதேனும் தவறு நடந்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்தார்.
”நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்”
ஆக்சிஜன் குறைபாடு காரணமாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அது வேறு பிரச்னை , இது வேறு பிரச்னை சார். எல்லா புகார்களும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதியதாக அமைந்துள்ள அரசு மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொன்றாக செய்ய தொடங்கியுள்ளோம். சற்றே நேரம் கொடுங்கள். மிகத்தரமான மருத்துவ சேவையை அரசு வழங்கும். மக்கள் இவ்வளவு நாளாக எதிர்கொண்ட துயரத்தை எங்களிடம் பகிர்ந்துள்ளனர். அதை சரிசெய்யவே நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். புதிய அரசாங்கம் இப்போது தான் அமைந்துள்ளது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட மருத்துவர் நடவடிக்கைகளை எடுப்பார்” என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்






















