சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 48 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  குறிப்பாக திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கடைகளில் தொடர்ந்து தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி சின்ன கடை வீதியில் உள்ள ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி, சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட  3 கடைகள், பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர். 


மேலும், அமலாக்கதுறை அதிகாரிகள் கடையில் உள்ளே நகைகள் மற்றும் ஆவணங்களை குறித்து சோதனை செய்தனர். மேலும் சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். குறிப்பிட்ட இந்த 4 கடைகளில் நடத்தப்பட சோதனைக்கும் சென்னையில் நகை கடைகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்களில் மணல் குவாரிகளில் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருச்சியில் சிறிய நகை கடைகளின் மூலம் வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார்களா? அல்லது மணல் குவாரியுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையில் குறிப்பாக இந்த சோதனையில் 6 கார்களில், 20 அதிகாரிகள், 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.




திருச்சி, ஜாபர்ஷா வீதியில் உள்ள 3 நகைகடைகளிலும் பெரிய கடைவீதியில் உள்ள 1 நகைகடையிலும் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று முந்தினம்  மதியம் 12 மணியளவில் 2 கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது. மற்ற கடைகளில் நேற்று மதியம் வரை சோதனை நடைபெற்றது. சென்னையில் நகை கடைகளில் சோதனை நடத்தப்பட்டதால் திருச்சியில் உள்ள நகைக்கடைகள் தங்க கட்டிகளை வாங்கி பட்டறைக்கு கொடுத்து நகைகளாக மாற்றி விற்பனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படை அதிகாரிகள் திடீரென சாதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 2 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள், பணம் போன்றவை கைப்பற்றப்பட்டது.




மேலும் தங்க நகைகளை கட்டிகளாக வாங்கி அதை நகைகளாக மாற்றி விற்பனை செய்த வகையில் சங்கேத மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட தங்கத்திற்கும் இருப்பில் உள்ள தங்கத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும் தங்க கட்டிகளை கள்ளச் சந்தையில் பெற்று அதை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பல கோடி ரூபாய் வரியைப்பு செய்யப்பட்டதும் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.