மெருகேறுகிறது பஞ்சப்பூர் என்று கூறினால் மிகையில்லை. அந்தளவிற்கு பஞ்சப்பூர் வளர்ச்சியை நோக்கி வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவது குறித்து வெளியான தகவல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி, பஞ்சப்பூரில் புதிய 7.2 MW சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு (KKBT) அருகில் இந்த நிலையம் அமைய உள்ளது என்ற இனிப்பான செய்தி இப்பகுதி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு, நிதி பெறுவதற்காக நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 9.6MW சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூசு படிவதைக் குறைக்க, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (NH) தள்ளி இந்த இடம் அமைந்துள்ளது. புதிய Tangedco துணை மின் நிலையம் வர தாமதமானால், ஏற்கனவே உள்ள E புதூர் துணை மின் நிலையத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் நிலையங்களுக்கான கட்டணத்தை மாநகராட்சி ஈடு செய்யும். மேலும், பஞ்சப்பூரில் 9.6 MW திறன் கொண்ட மற்றொரு சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பாலக்கரை அருகே உள்ள மண்டலம் II அலுவலகத்தில் 100 kW திறன் கொண்ட சூரிய மின் தகடு அமைக்கும் திட்டமும் உள்ளது.

இதற்கான DPR நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. "DPR நிதி பெறுவதற்காக நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் ஏற்கனவே உள்ள 9.6MW சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த இடத்தை விரைவில் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். சூரிய மின் தகடுகளை பொருத்த சிமெண்ட் தூண்கள் அமைக்கப்படும். இந்த இடம் திருச்சி-மதுரை NH-லிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் இருப்பதால், தூசு படிவது குறைவாக இருக்கும். இதனால், சூரிய மின் தகடுகளை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

பஞ்சப்பூரில் புதிய Tangedco துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆனால், அது தாமதமாகலாம். அதனால், புதிய மின் உற்பத்தி நிலையத்தை E புதூர் துணை மின் நிலையத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏற்கனவே உள்ள பூமிக்கடியில் செல்லும் கேபிள் மூலம் இணைக்க முடியும். இதனால் திருச்சியின் மிக முக்கியமான பகுதியாக பஞ்சப்பூர் மாற்றம் பெற்று வருகிறது.