எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் - 2024 முன்னேற்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வேட்பாளர்களின் தேர்தல் கணக்குகளை முறையாக கணக்கீடு செய்திட ஏதுவாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் தேர்தலின் போது  செய்யப்படும் செலவினங்கள் தொடர்பான பட்டியல் அவற்றின் மதிப்பீடு ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஒப்புதலை பெறும் பொருட்டு  திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் வேட்பாளர்களால் செய்யப்படும் செலவினங்கள் தொடர்பான பட்டியல் அவற்றின் மதிப்பீடுகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விரிவாக எடுத்துரைத்தார். அதன்பேரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டது. 


மேலும், மேற்படி பட்டியல் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின் எழுத்துப் பூர்வமாக இரண்டு தினங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்படி ஆலோசனை கூட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தற்போதைய நிலையில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பான பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கும் வழங்கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் விரிவாக விவாதிக்கப்பட்டது.




அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்டவாறு வாக்குச்சாவடி மையங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.


1- மணப்பாறை - 3 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன, 35 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


2- திருவரங்கம் ( ஸ்ரீரங்கம்) - 16 வாக்குச் சாவடிகள் இடமாற்றம், 4 வாக்குச்சாவடிகளின் கட்டடம் மாற்றம், 39 வாக்குச் சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


3- திருச்சி மேற்கு தொகுதி - 5 வாக்குச்சாவடிகள் இடமாற்றம், 3 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


4- திருவெறும்பூர் -  3 வாக்குச்சாவடிகள் இடமாற்றம், 6 வாக்குச்சாவடிகள் கட்டடம் மாற்றம், 6 வாக்குச் சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


5- மண்ணச்சநல்லூர் - 1 ஒரு வாக்குச் சாவடியின் பெயர் மாற்றம், 1 வாக்குச் சாவடியின் கட்டடம் மாற்றம், இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


6- முசிறி- 5 வாக்குச்சாவடிகளின் கட்டடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


7-  துறையூர் - ஒரு வாக்குச் சாவடி இடமாற்றம், 13 வாக்குச்சாவடி கட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆக மொத்தமாக 132 வாக்குச்சாவடிகள் மாற்றம் குறித்த பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்தார் .




மேற்படி திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டு இது தொடர்பாக, ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் எழுத்துப் பூர்வமாக 2 தினங்களுக்குள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


மேற்படி ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) திரு.என்.சீனிவாசன், தனி வட்டாட்சியர்(தேர்தல்) திரு.முத்துசாமி, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைத்து