திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களான திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், அரிசி ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க தொடர்ந்து சோதனைகளும் செய்யப்பட்டன. தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டி.ஜி.பி. உத்தரவின்பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் திருச்சி சரகம், தஞ்சாவூர் சரகம் மற்றும் மயிலாடுதுறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் நடந்த இந்த சோதனைகளில் கடந்த 2021-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதிகமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 




மேலும் 2022-ம் ஆண்டில் மொத்தம் 1,851 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 518 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொது வினியோகத் திட்ட மண்ணெண்ணெய் 4,287 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டும், வணிக நிறுவனங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தி வந்ததாக 239 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அவற்றை கள்ளத்தனமாக பயன்படுத்தி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொது வினியோகத் திட்ட அரிசி, மண்எண்ணெய், சிலிண்டர்கள் ஆகியவற்றின் மதிப்பு கடந்த 2021-ம் ஆண்டைவிட ரூ.10 லட்சத்து 84 ஆயிரத்து 345 கூடுதலாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வகையான குற்றங்களை செய்ததாக 1,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி மண்டலத்தில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் விதமாக தொடர்ந்து துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.