திருச்சியில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் திருச்சி கே.கே.நகரை சேர்ந்த கருணாநிதி (வயது 59) என்பவர் டிரைவராகவும், திருவளர்சோலையை சேர்ந்த கார்த்திக்கேயன்(45) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். நெ.1 டோல்கேட் ரவுண்டானாவில் பேருந்து வந்தபோது அவ்வழியாக இறுதி ஊர்வலத்தில் வந்த சிலர் மது போதையில் இறந்தவர் உடலின் மேல் கிடந்த மலர் மாலையை எடுத்து பஸ்சின் மீது வீசி பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை கருணாநிதி தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த சிலர் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த வைப்பர் கம்பியை உடைத்து தாக்கினர். அப்போது ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியில் இருந்த கொள்ளிடம் போலீசார் பஸ் டிரைவரை தாக்கி ரகளையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். இருப்பினும் மதுபோதையின் உச்சத்தில் இருந்த அவர்கள் போலீசாரையும் வசைப்பாடியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






இதனை தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்களை சமரச படுத்திய போலீசார் இந்த சம்பவத்தில் காயமடைந்த கருணாநிதியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கருணாநிதி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் பிச்சாண்டார்கோவில் கீழத்தெருவை சேர்ந்த கருணாகரன்‌ மகன் விஜயராஜை (28) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.