திருச்சி : பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு.. 35 சவரன் நகை திருட்டு.. துணிகரத்தால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Continues below advertisement

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலம் காவல் சரகம் அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இந்த தம்பதியின் மகன் கோபி. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கோபியின் தந்தை சிவலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் அபினிமங்கலத்தில் ஜெயராணியும், கோபியின் மனைவி அன்னபூரணியும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னபூரணி வெளியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜெயராணி நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அங்கேயே மறைவான இடத்தில் சாவியை வைத்துவிட்டு தபால் நிலையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றார்.

Continues below advertisement

பின்னர் மாலை 5 மணி அளவில் ஜெயராணி வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த  35 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டு இருந்தன.



இதுகுறித்து ஜெயராணி புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெயராணி வீட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்தபோது, யாரோ மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டுள்ளனர். அவர் வெளியே சென்றதும் சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்களிடம் காவல்துறை தீவிர விசாரனை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் இருந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரனை மேற்க்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் அருகில் அமைக்கபட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும்  இதுதொடர்பாக காவல்துரையினர்  வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து வழிபறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் மட்டும் அல்லாமல் வீட்டுக்குள் தனியாக இருக்கும் போதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு சந்தேகம்படும்படி யாராவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மக்களை அச்சுறுத்தும் விதமான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement