திருச்சி மாவட்டம் தென்னூர் ரெஜிமண்ட் பஜாரில் வாடகை வீட்டில் முதல் மாடியில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருபவர்கள் நடராஜன் (51) கூலித்தொழிலாளி, இவரது மனைவி மகாலட்சுமி வயது (49), இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை இதற்காக மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்றும் குழந்தை இல்லை இதனால் தம்பதிகள் ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதிய வருவாயும் இல்லை முதுமை காலத்தில் தங்களை கவனிக்க பிள்ளைகள் இல்லையே என்ற கவலையில் இருந்து வந்ததாக தெரிகிறது இதனால் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று இரவு பெட்ரோல் பங்குக்கு சென்று கேனில் பெட்ரோல் வாங்கி வந்து அறையில் வைத்திருந்தனர். இன்று அதிகாலை தம்பதியர்கள் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இந்த தீ மளமளவென அவர்கள் உடம்பில் பற்றிக் கொண்டதால் வலி தாங்க முடியாமல் தம்பதியினர் இருவரும், வீட்டின் நான்கு மூலைகளிலும் கதறியபடி ஓடி உள்ளனர். தம்பதிகளின் இந்த மரண ஓலத்தை கேட்டு அருகிலிருந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதால், அவர்களின் உடலின் அருகே செல்ல முடியாமல், நெருப்பை அணைக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர், தகவல் அறிந்து வந்த தில்லைநகர் காவல்துறையினர் படுக்கை அறையில் உள்ள கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த தம்பதிகளை காப்பாற்றி உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, 90% தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் இருவரும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இதுபோன்ற முடிவு எடுத்து இருக்கிறீர்களா, என காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். பல ஆண்டுகளாக இந்த பகுதி தான் வசித்து வருகிறார்கள், இவர்களுக்கு குழந்தை இல்லை என பலமுறை வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் தனிமையில் அமர்ந்து இருப்பார்கள் மேலும் அன்றாட கூலி வேலைக்கு சென்று வருவார் நடராஜன் இவர்கள் குடும்பமும் வறுமையில் இருந்தது என தெரிவித்தனர். மேலும் கணவன் மனைவிக்கிடையே இதுவரை எந்தவிதமான பிரச்சனையும் ஏற்பட்டதாக தெரியவில்லை, இருவரும் மகிழ்ச்சியாக தான் இருந்தார்கள் குழந்தை இல்லையே என்று ஒரு ஏக்கத்துடன் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய சிகிச்சை எடுத்து வருவதாகவும், மேலும் குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் அவர்கள் அதிகமாக எந்த ஒரு விசேஷமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் மிகுந்த வருத்தத்துடன் இருவரும் இருப்பார்கள் என்று தெரிவித்தனர். மேலும் இவர்களின் தற்கொலைக்கு வறுமை ஒன்று தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்று அந்த பகுதியின் மக்களிடையே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.