தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வரும். இந்நிலையில் மக்கள் குறைகளை அந்த அந்த மாவட்டங்களில் இருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் மக்களின் குறைகளை நேரடியாக சென்று தீர்த்து வைக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்களிடம் நேரடியாகச் சென்று மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் 11 தாலுகாகளில் உள்ள முதன்மையான பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்று அதற்கான உரிய நடவடிக்கை  எடுக்கபடும் என தெரிவித்தனர்.




திருச்சி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், லால்குடி தாலுகாவில் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில், திருச்சி-திண்டுக்கல் சாலை, தாயனூர் கேர் கல்லூரியில், திருச்சி மேற்கு தாலுகாவில் திருச்சி கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகிய இடங்களில்  நடைபெற்று வரும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்க்கொள்ளபடும் என தெரிவித்தனர். மேலும் அதிக அளவில் திருச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள், பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என தொடர்ந்து மக்கள் தெரிவித்து வருகிறார்கள் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.




தொடர்ந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, இலால்குடி, மண்ணச்சநல்லூர் போன்ற பகுதிகளில் சாலை பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை உள்ளது என மக்கள தெரிவிக்கின்றனர். அதேபோல் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம், சாலை மேம்படுத்தல், தாலிக்கு தங்கம் திட்டம், விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பட்டா, அரசு சார்பில் வீடு கட்டிதரும் திட்டம், அரசு வழங்கும் மாணியம் தொடர்பான திட்டம் என பல்வேறு திட்டங்கள் சரியாக மக்களை சென்று சேரவில்லை என புகார் மனுக்கள் வந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக அவர்களின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்களை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் பெற்ற மனுக்கள் மீது வரும் 30 ஆம் தேதிக்குள் தீர்வு கானப்படும் என அமைச்சர் நேரு உறுதி அளித்துள்ளார்.