அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி 8 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக `எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்கிற முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை 8 நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் 12 ஆயிரம் சதுர அடி அரங்கத்தில் இந்த கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறைகள் அனைவரும் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற அடிப்படையில் உயர்ந்த முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு ஆர்ட்ஸ் மற்றும் நடிகர் - கவிஞர் ஜோ மல்லூரி ஒருங்கிணைப்பில் இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை வருகிற 23-ந்தேதி நடிகர் பிரபு திறந்து வைக்கிறார். தொடர்ந்து 8 நாட்களும் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விமல், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் மற்றும் இயக்குனர் லிங்குசாமி போன்றோர் பங்கேற்க இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் 6 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். 

Continues below advertisement

மேலும் கண்காட்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசியது..  தமிழகத்தில் ஏராளமான முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலமும், உழைப்பும் இருந்துள்ளது. அதேபோல் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 40 ஆண்டு காலமாக தன்னுடைய உழைப்பால் முதலமைச்சர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார். எனவே அவருடைய வாழ்க்கை பயணங்கள் அடங்கிய இந்த கண்காட்சியானது பல மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் அரசியல் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும். கட்சி நடத்துவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார். அ.தி.மு.க.வின் திட்டங்களை தி.மு.க. முடக்கவில்லை. தி.மு.க.வின் திட்டங்களை தான் அ.தி.மு.க. முடக்கியது. திருச்சியின் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வருகிற டிசம்பர் மாதம் திறக்கப்படும். 35 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறைச்சாலைகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. திருச்சி காந்திமார்க்கெட் ரூ.11 கோடியில் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola