அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு மேலும் பேசியது: அரியலூர் காவிக்கோட்டை என்பதை மறக்க வேண்டும். இன்றைய தினம் திராவிடர் கழகத்தினரின் கூட்டத்தை பார்த்திருப்பீர்கள். இனி அரியலூரை யாரும் காவிக் கோட்டை என சொல்ல மாட்டார்கள். திராவிட மாடல் என்பது அனைவரும் தேர்லில் துண்டு போட்டு செல்வது தான். அதைத்தான் திராவிட இயக்கங்கள் செய்து வருகிறது. அக்காலத்தில் செங்கல் கொண்டு வீடுகட்ட கூடாது, வீட்டில் கிணறு வெட்டக்கூடாது என இருந்ததை திராவிடர் இயக்கம் மாற்றியுள்ளது. திராவிடர் கழகத்தினால் மேற்கொண்ட போராட்டங்களினால் இன்று நாடு முழுவதும் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்கள், பெண்கள் மருத்துவர்களாகவும், மேயராகவும் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். நமது போராட்டங்கள் பல சமுதாய புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. இது ஆயுதம் ஏந்திய புரட்சி இல்லை. அறிவுப் புரட்சியால், சமத்துவ புரட்சியால் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. ஆளும் பாஜக கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கை என்பது நேஷனல் எஜூகேசன் பாலிசி என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அது நோ எஜூகேசன் பாலிசியாக அதாவது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பாமர மக்களுக்கு கல்வி இல்லை என்று கூறும் திட்டமாக இருக்கிறது. 




மேலும் 3 ஆம் வகுப்பு, 5 ஆம், வகுப்பு, 8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தி கல்வியை சீர்குலைக்க முயற்சிக்கிறது. எனவே இதையும் நாம் எதிர்க்கிறோம். வெற்றி பெறுவோம் திராவிடர் கழகமும், பெரியாரும் எடுத்த எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் போனது இல்லை. அதன்படி இந்த போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறோம். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வெற்றி சற்று தாமதம் ஆகலாம். ஆனால் வெற்றி பெற்றே தீருவோம் என்றார். மாநாட்டில், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக பேரணியை சிறப்பான மேற்கொண்ட நாகைக்கு முதல் பரிசு மற்றும் சான்றிதழ், தஞ்சாவூருக்கு 2 ஆவது பரிசும், சான்றிதழ், விருத்தாசலத்துக்கு 3 ஆவது பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண