நெல்லையில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள  அனைத்து பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 205 துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, 85 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை இரு தினங்களில் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று சேதமடைந்துள்ள தனியார் பள்ளி கட்டடங்களை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொதுப்பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை 24 மணி நேரத்தில்  அகற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறை, உணவுக்கூடம், கழிப்பறைகள் என சேதமடைந்த கட்டடங்கள் எதுவாக இருந்தாலும் அகற்றப்படும். சேதமடைந்த வகுப்பறைகளில் கண்டிப்பாக வகுப்பெடுக்க கூடாது. சேதமடைந்த வகுப்புகளை மூட வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ஏற்கனவே பொதுப்பணித்துறையிடம் கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 85 கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளோம். அதே சமயம் மழைக்காலத்தில் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டடங்களை ஆய்வு செய்யப்படும். அவ்வாறு ஆய்வின் போது சேதமடைந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியர்  உத்தரவுக்கு காத்திராமல்  உடனடியாக கட்டிடங்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  திருச்சியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த 16 கட்டடங்கள். இதில் எவ்வித சேதமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என்றார். மேலும் இதில் ராணி மங்கம்மாள் கோட்டை உள்ளிட்ட 8. இடங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்ட பிறகும், பயன்பாட்டில் உள்ள  பழைய கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.




திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய உத்தவு பிறப்பிக்கபட்டுள்ளது. குறிப்பாக தனியார் பள்ளி,விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பபட்டுள்ளது என்றார். இந்நிலையில் திருச்சி தாரநல்லூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரம் குறித்து புகார் எழுந்த நிலையில் அதுகுறித்த NIT வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர் அவர்களின் ஆய்வறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.