திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள் , நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர்
காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி மேடை பேச்சு..
திருச்சி என்றாலே வரலாற்று சிறப்புடைய ஒரு இடம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதுவரை திருச்சியில் மத மோதல் கலவரம் வந்ததில்லை. அனைவரும் சமம் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
காமராஜருக்கும் திருச்சிக்கும் நீண்ட உறவு உண்டு. மக்களையும் சாமானிய தொண்டர்களையும் உணர்வுப்பூர்வமாக மதிக்கக் கூடியவர்.
கடை கோடி தொண்டனாக இருந்தாலும் அரவணைத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் காமராஜருக்கு நிகரான தலைவர் யாருமில்லை.
நாம் யாரும் , யாருக்கும் அடிமை இல்லை என உறுதியாக அனைவரிடமும் நடந்து கொண்டவர் காமராஜர்.
காங்கிரஸ் இருந்தால் இந்தியா வளர்ச்சி அடையும்
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி வருவதற்கு நம் அனைவரும் ஒன்று இணைந்து பாடுபட வேண்டும்.
குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி முதன்மை இயக்கமாக மாற வேண்டும், அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தான் பாஜகவில் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பெண் நிர்வாகி சம்பந்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும்.
மானங்கெட்டவர்கள், மனிதனுக்கு பிறந்தவர்கள் தூக்கில் தொங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நான் என்று சொன்னால் அவ்வாறே செயல்பட்டால் அவர்களுக்கு எப்போதும் கட்சியில் இடமில்லை.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைவரும் சமம் நாம் என்று சொல்ல வேண்டும் ஒற்றுமையாக இணைந்து பாடுபட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்தால் இந்தியா வளர்ச்சி அடையும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி இருந்தால் இந்தியா இருக்கும். காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் இந்தியா இருக்காது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க தயாராக வேண்டும். திருச்சியில் நடைபெற்ற இந்த செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு ஒரு பெரும் எழுச்சி ஏற்படுத்த வேண்டும்.
விரைவில் தமிழ்நாட்டில் முதன்மை இயக்கமாக காங்கிரஸ் கட்சி உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.