மாளிகைமேடு : இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி ,யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மார்ச் 25-ந்தேதி பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி மற்றும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம், யானை தந்தத்தால் ஆன மனித உருவ சிற்பத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தின் பாகம் இடுப்பின் கீழ் பகுதியில் இருந்து கால்கள் வரை உள்ளது. அதன் உயரம் 1.8 செ.மீட்டரும், அகலம் 1.5 செ.மீட்டரும், இதன் எடை 1 கிராம் 100 மில்லி அளவிலும் உள்ளது. சோழர்களின் கலையை பின்பற்றி, அக்காலத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். 

Continues below advertisement


இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும். மேலும் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆய்வு பணி இந்த மாதம் இறுதிவரை நடைபெறுவதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். 


மேலும் குறிப்பாக கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில் தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியினை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் தற்போது முதல் முறையாக 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலம் கொண்ட பழங்காலத்து மண்பானை ஒன்றும், மண்ணாலான கெண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 25 செ.மீ. உயரம் மற்றும் 12.5 செ.மீ. அகலம் கொண்ட இந்த பானையானது ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் உள்ளது. இந்த பானை தரை தளத்தில் இருந்து சுமார் 18 செ.மீ. ஆழத்தில் கிடைத்துள்ளது.கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழாய்வில், செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான கூரை ஓடுகள் வடிவில் அரச அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் கண்டறியப்பட்டது. மேலும்  செப்பு காப்பு ஒன்று, முழுமையான மண்பானை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை செப்பு நாணயங்கள், செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீன பொருட்கள் உள்ளிட்டவை மாளிகைமேடு தளத்தில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. ஏற்கனவே  யானை தந்தத்தால் ஆன பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola