திருச்சிக்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா - காரணம் என்ன?

காவிரி விவகாரத்தில் அனைத்து தரப்பும் பேசி பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தீர்வு காணும் நாள் வரும் - முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி

Continues below advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார். மூலவர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Continues below advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியது..

தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோவிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தேன். தற்பொழுது மீண்டும் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியது.. 


காவிரி விவகாரத்தில் பிரதமர் உள்ளிட்ட ஆளுகின்ற அனைவருக்கும் உண்மை நிலை தெரியும். பெங்களூரில் வசிக்கும் ஒரு கோடியே 40 லட்சம் மக்களுக்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை. காவிரி தீர்ப்பாயமும் குடிநீருக்கு கூட உரிய நீர் ஒதுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். காவிரி விவகாரத்தில் அனைத்து தரப்பும் பேசி பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அதற்கு உரிய தீர்வு காணும் நாள் வரும் என்றார்.

Continues below advertisement