ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. என அழைக்கப்படும் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் மூலம் ரெயில்களில் பயணிகளுக்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையங்களிலும், ஓடும் ரெயில்களிலும் தட்டில் கையில் ஏந்தி உணவு வகைகளை சீருடை அணிந்த ஊழியர்கள் விற்பனை செய்வதை காணமுடியும். இதனை தனிநபர்கள் ஒப்பந்தம் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையங்களில் உணவுகளை தயாரித்து ரெயில்கள், ரெயில் நிலைய வளாகங்களில் விற்கப்படுகிறது. இதனை ஐ.ஆர்.சி.டி.சி. கண்காணிக்கும். இந்த நிலையில் உணவுகளின் விலையை மாற்றம் செய்து நிர்ணயித்து ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள் என சுமார் 70 உணவுகளின் விலைகள் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உணவு விலையேற்றம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

 



 

உயர்த்தப்பட்ட உணவு வகைகளின் விலை விவரம் :

 

2 சப்பாத்தி ரூ.20-க்கும், 2 இட்லி சட்னி, சாம்பாருடன் ரூ.20-க்கும், பிரெட் சான்வெட்ஜ் ரூ.20-க்கும், 2 போண்டா சாஸ் உடன் ரூ.20-க்கும், 2 சமோசா சாஸ் உடன் ரூ.20-க்கும், 2 மெதுவடை அல்லது பருப்பு வடை சட்னியுடன் தலா ரூ.30-க்கும், குளிர், சூடான பால் தலா ரூ.20-க்கும், ரவா, கோதுமை, சேமியா உப்புமா தலா ரூ.30-க்கும், ஆனியன், ரவா ஊத்தாப்பம் தலா ரூ.30-க்கும், மசாலா தோசை ரூ.50-க்கும், புளி, எலுமிச்சை, தயிர், தேங்காய் சாதம் தலா ரூ.50-க்கும், பன்னீர் பக்கோடா ரூ.50-க்கும், வெஜ் பர்கர் ரூ.50-க்கும், வெஜ் நூடுல்ஸ் ரூ.50-க்கும், வெஜ் பிரைடு ரைஸ் ரூ.80-க்கும், பன்னீர் சில்லி, மஞ்சூரியன் தலா ரூ.100-க்கும், பன்னீர் கிரேவி ரூ.100-க்கும் விற்கப்படும். இதேபோல 2 அவித்த முட்டை ரூ.30-க்கும், சிக்கன் சான்வெட்ஜ் ரூ.50-க்கும், முட்டை கிரேவி ரூ.50-க்கும், எக் பிரைடு ரைஸ், நூடுல்ஸ் தலா ரூ.90-க்கும், மீன் கட்லெட் 2 பீஸ் ரூ.100-க்கும், சிக்கன் போன்லெஸ், சிக்கன் 65, செட்டிநாடு சிக்கன் 100 கிராம் மற்றும் கிரேவியுடன் தலா ரூ.100-க்கும், மீன் கிரேவி ரூ.100-க்கும், சிக்கன் பிரைடு ரைஸ், நூடுல்ஸ் தலா ரூ.100-க்கும் விற்கப்படும்.

 



 

இதனை தொடர்ந்து இனிப்பு வகைகளில் ஜிலேபி ரூ.20-க்கும், குலோப் ஜாம் ரூ.20-க்கும், கேசரி ரூ.20-க்கும், அவித்த காய்கறிகள் 100 கிராம் ரூ.30-க்கும், பாலுடன் சோளம் போலி ரூ.40-க்கும், பாலுடன் ஓட்ஸ் ரூ.40-க்கும், ஆம்லெட் உடன் 2 பிரெட் ரூ.50-க்கும், கிச்சடி ரூ.50-க்கும், ஸ்பிரிங் ரோல் 2 பீஸ் ரூ.80-க்கும், 2 சிக்கன் கட்லெட் ரூ.80-க்கும், 2 ராகி இட்லி ரூ.40-க்கும், ராகி மசாலா தோசை ரூ.40-க்கும், ராகி ஊத்தாப்பம் ரூ.40-க்கும், ராகி உப்புமா ரூ.50-க்கும் விற்கப்படும். இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பினர் கூறுகையில்... ஐ.ஆர்.சி.டி.சி.யின் கேட்டரிங் மூலம் ரெயில்களில் விற்கப்படும் உணவுகளின் விலை மட்டும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் தெற்கு ரெயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு மட்டும் பொருந்தும். ரெயில் நிலையங்களில் உள்ள கடைகளில் உணவுகளின் விலை எதுவும் தற்போதைக்கு உயர்த்தப்படவில்லை. விரைவில் அவையும் உயா்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.

 



 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.