சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும்போது மாற்று ஏற்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் போது வாடகை கட்டடங்களில் பள்ளி மாணவர்களை அமரவைத்து கல்வி பயில வழிவகை செய்யப்படும்.

Continues below advertisement

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அருகேயுள்ள கலையரங்கத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “நிலத் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் நியம கோரிக்கையை வைத்துள்ளார்கள். நாங்கள் அதனை நிறைவேற்றுவோம் என்றார். தமிழ்நாட்டை பொருத்தவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் மிகவும் முக்கியம் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடைக்கைகளை பள்ளிகல்வி துறை மேற்க்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார். மேலும் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது ஆகையால் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement


மேலும் இந்தாண்டு எதிர்பாராத விதமாக தொடர்கன மழை பெய்தது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் பள்ளிகளின் சுவர் சேதமடைந்துள்ளதாக தகவல் கிடைத்தது உடனே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் சேதமடைந்த விபரங்களை பெற்று ஆய்வு செய்தோம்.இது தொடர்பாக சேதமடைந்த பள்ளிகளை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிடபட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளை பாதுகாப்பான இடத்தில் அமர வைத்து வகுப்புகள் நடத்த உத்தரவிடபட்டுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக நெல்லையில் சுவர் இடிந்து மாணவர்கள் உயிர் இழந்தது வேதனை அளித்தது. இதை தொடர்ந்து உடனடியாக தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் விபரங்களையும் , அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது பழமையான பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் போது வாடகை கட்டடங்களில் பள்ளி மாணவர்களை அமரவைத்து கல்வி பயில வழிவகை செய்யப்படும். திருச்சியில் 410 பள்ளிகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை இடித்து பின்னர் புதிய கட்டுமான பணிகளை துவக்குவோம். பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகள் இணைந்து குழுவாக பள்ளி கட்டடங்களை இடிக்கும் இந்த பணியில் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் 75 கோடி ஒதுக்கினார்கள். இதற்காக ஒதுக்கி இருந்தார்கள் தற்போது 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். நெல்லை விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிகழ்வு மிகவும் வருந்தக்கூடிய ஒன்று. இது அரசு பள்ளிக்கு மட்டுமல்ல தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எந்த பள்ளியாக இருந்தாலும், கட்டிடங்களின் ஆய்வு என்பது தரத்தை ஆய்வு செய்வோம்

Continues below advertisement
Sponsored Links by Taboola