பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகள் கழித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் செல்லியம்மன் கோவில் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 1912-ஆம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே தகராறு இருந்து வந்தது. தற்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் முன்பாக இரு தரப்பு மக்களையும் அழைத்து பல கட்டமாக அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வி.களத்தூர் கிராமத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் திருவிழா நடத்திட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கோவில் திருவிழாக்கான அழைப்பிதழை வழங்கி திருவிழாவினை முன்னின்று நடத்த அழைப்பு விடுத்தனர். வி.களத்தூர் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கடந்த மே மாதம் 16ம் தேதி அன்று நடைபெற்றது.




இவ்விழாவிற்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தார்கள் இந்து சமய பிரமுகர்களிடம் வழங்கி அவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள். மேலும் அவர்களுக்கான உரிய மரியாதை வழங்கி எவ்வித அசம்பாவிதமும் இன்றி விழா சிறப்பாக சுமூகமாக இருதரப்பு சமுதாயத்தினரும் இணைந்து நடைபெற்று முடிந்தது.


வி.களத்தூர் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா ஆலயங்களில் ஊரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி உலா 30-ஆம் தேதி நேற்று முதல் 31 மற்றும் 1-ஆம் தேதி ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. 




சமுதாய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் நேற்று பூரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி விழாவும் நடைபெற்றது. அதில் முஸ்லிம் ஜமாத்தார் திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் இரு சமுதாய முக்கிய பிரமுகர்கள் இணைந்து எவ்வித அசம்பாவிதமும் இன்றி கோவில் விழா சுமுகமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண