இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்திய இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.12,000 கோடியில் ஸ்கில் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ரோஸ்கர் மேளா:


இந்நிலையில் ரோஸ்கர் மேளா  என்ற திட்டம்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம்  இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், குடிமக்களின் நலனை உறுதி செய்யவும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க முயற்சி செய்து வருகிறது.  மேலும், இதன் ஒரு பகுதியாக இன்று 7 வது பணி நியமன ஆணை வழங்கும் விழா நாடு முழுவதும்  நடைபெற்றது. இதில்   70 ஆயிரம் நபர்களுக்கான பணி ஆணை வழங்கபட்டது. இதன் ஒரு பகுதியாக  திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு  திருச்சி மாவட்டத்திற்கு மொத்தம் 109 பேருக்கு பணி நியமன ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நேரடியாக இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 61 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.




இதனை தொடர்ந்து, விழா மேடையில்  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை  இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 9 - ஆண்டில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடி அவர்களின் எண்ணம்.  மேலும்  நமது நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதமாக மேக் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் டெவலப்மெண்ட் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்றார்.


6 லட்சம் வேலைவாய்ப்புகள்:


கடந்த 9 ஆண்டுகளில் 1 லட்சம், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கப்பட்டுள்ளது.  ஆகையால் தான்   நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் நாம்  5 - வது இடத்தில் உள்ளோம்.  மத்திய அரசாங்கத்தில் உள்ள பல லட்சம் வேலை வாய்ப்புகளில் கடந்த 6 மாதத்தில் 6 - லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக குரூப் B, குரூப் C,  அதிகப்படியான வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு கர்மயோகி பரம்பா என்ற திட்டத்தின் கீழ் ஆன்லைனில் பயிற்சி வழங்கப்பட்டது. தபால் நிலையங்கள், ரயில் தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள  காலையிடங்களில் பணியாற்ற இளைஞர்களுக்கு   வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




இந்த நேரத்தில் நமது நாட்டின் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரதமர் உள் கட்டமைப்பை மேம்படுத்தி சிறந்த ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக நேரடியாக பொது மக்களுக்கு திட்டத்தை கொண்டு செல்கிறார். தேவையான சட்டங்கள் இயற்றி,  தேவையற்ற சட்டங்களை நீக்கப்பட்டு,  வளர்ச்சிக்கு  தடை இல்லாத படி தேவையற்றதை அகற்றி,  வெளிப்படையான ஆட்சி நடத்தி வருகிறார். சேவை செய்ய வேண்டும், நல்ல அரசு வழங்க வேண்டும், ஏழை மக்களுக்கான திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மோடி உள்ளார். இதுபோல சிறப்பான திட்டங்களை  நேரடியாக அதிகாரிகள்  மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


விவசாயிகள் முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டியில் கிசான் கிரெடிட் கார்டு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தெருவோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நிர்மலா சீதாராம் கடந்த பட்ஜெட்டை வழங்கும்போது வரும் 25 வருடங்களுக்கான திட்டத்தை கொடுத்துள்ளார். இதன் நோக்கம் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு அடையாளமாகும் என்றார். நமது நாட்டின் கட்டமைப்பு வேகமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். 


மேலும், இவ்விழாவில் சுங்கத்துறை உதவி ஆணையர் விஜயபாஸ்கர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் பேராசிரியர் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டல மேலாளர் காமேஸ்வரன், சுங்கத்துறை அதிகாரி கே.எம்.ரவிச்சந்திரன், சுங்கம் மற்றும் சேவை வரி அதிகாரி
ஆனந்த கிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.