தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ் 24. இவரது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகன விபத்தில் காயம்பட்டு சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக தனியார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், காளிராஜிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.


அதற்கு அவர் திருச்சிக்கு செல்ல வேண்டும் என கூறவே, அவரிடம் உதவி செய்கிறேன் எனக்கூறி வசந்த் அவரது வாகனத்தில் காளிராஜ்-ஐ ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்ற போது தனது விட்டிற்கு சென்றவுடன் திரும்பி வந்துவிடாலம் என கூறி இருங்களுர் குடிசை மாற்று வாரியம் 5-ம் நம்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுள்ளார்.


தன்பாலின உறவுக்கு வற்புறுத்தி கட்டாயம்:


அப்போது அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ மற்றும் அய்யனார் ஆகியோர்களை வசந்த் அறிமுகப்படுத்தியதாக தெரிய வருகிறது. சிறிது நேரத்தில், மேற்படி அங்கிருந்தவர்கள் அனைவரும், தங்களுடன் தன்பாலின உறவில் ஈடுபடுமாறு காளிராஜ்-ஐ வற்புறுத்தியுள்ளனர். ஆனால் காளிராஜ் மறுத்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல், பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அவரை வலுக்கட்டாயமாக தாக்கியும் தன்பாலின உறவில் ஈடுபட வைத்துள்ளனர்.




அதன் பின்னர், காளிராஜிடம் அவரது சாதி குறித்து விசாரித்து, அவரது ஜாதிப் பெயரைக் கூறி இழிவான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களைக் காட்டி காளிராஜிடம்  இருந்த செல்போன் மற்றும் ரூ.1100/- பணம் ஆகியவற்றினை கூட்டாக பறித்துக்கொண்டனர். இந்நிலையில்  காளிராஜ், அவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதபோது, இங்கு நடத்த சம்பவங்களை வெளியே கூறினால் உன்னை காலி செய்து விடுவோம் எனக்கூறி காளிராஜை, வசந்த் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி திருச்சி மெயின் ரோட்டில் இறக்கி விட்டுள்ளார்.


காவல்நிலையத்தில் புகார்:


இந்நிலையில் மேற்படி காளிராஜ் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீக்கடைகாரரிடம் போன் வாங்கி திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தினை கூறிவிட்டு,  எதிரிகள் தாக்கியதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். காளிராஜிடம் சமயபுரம் மருத்துவமனையில் காவல்துறையினர் புகார்மனு பெற்று சமயபுரம் போலீசார்   வழக்கு பதிவு செய்து  ஐந்து நபர்களையும் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.