அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை கூறும் ஸ்டாலின் அதுகுறித்து விவாதிக்க தயாரா? - பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால். 


சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது - திமுக தலைவர் ஸ்டாலின்


தமிழகத்திற்கான வளர்ச்சியை பாஜக அதிமுக கூட்டணியை தவிர வேறு யாராலும் தரமுடியாது - தேர்தல் பரப்புரையில் அமித்ஷா 


தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். 


மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பிரதமர் மோதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.   


நாங்கள் என்ன தப்புசெய்தோம், எங்களுக்கு ஏன் வாக்கு அளிப்பதில்லை - விஜயகாந்த மகன் விஜயபிரபாகரன் உருக்கம்.   


காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களிடம் தபால் வாக்குகள் மே 2ம் தேதி வரை பெறப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாகு 


மேற்குவங்கம் மற்றும் அசாமில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்துமுடிந்த இரண்டாம்காட்ட வாக்குப்பதிவு. 


புதுச்சேரியில் எந்த ஊரடங்கிற்கும் வாய்ப்பில்லை - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். 


மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை - வெயிலின் தாக்கம் குறைந்தது.   


நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகெப் பால்கே விருது - பிரதமர் மோதி, முதல்வர் பழனிசாமி, ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்ட பலர் வாழ்த்து. 


இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக அறிவிக்கப்படும் அமெரிக்கா மிச்சிகன் மாகாண ஆளுநர் அறிவிப்பு.