Breaking LIVE : பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம்..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குப்பை லாரிகளை இயக்கும் நேரத்தை நாங்கள் நிர்ணயம் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின் படி, நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும், அவர்களின் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் ரூ.255 கோடியில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 20.12.2022 நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென அறிவுறுத்தப்படுகிறது.
2022-23ஆம் கல்வி ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி அருகே கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. .!
பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெயரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
பரந்தூரில் உள்ள விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.
Background
கத்தாரில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. லூசையில் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
போட்டிக்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம் உள்பட 120 நிமிடங்களிலும் இரு அணிகளும் 3-3 என்ற சமநிலையில் இருந்தது. இதனால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக முதல் கோலை விளாச, மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். அடுத்த 2 வாய்ப்புகளையும் அர்ஜெண்டினா கோலாக்க பிரான்ஸ் கோட்டைவிட்டது. நான்காவது வாய்ப்பில் மீண்டும் பிரான்ஸ் கோல் அடிக்க, அர்ஜெண்டினா அணியின் இளம் வீரர் மோண்டியல் நான்காவது வாய்ப்பையும் கோலாக்க அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மாண்டியேல் கோல் அடித்து மூன்றாவது உலகக்கோப்பை அர்ஜெண்டினா அணிக்கு உறுதி செய்ததும், மெஸ்ஸி மைதானத்திலே உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார். ஒட்டுமொத்த அர்ஜெண்டினா அணியும் மெஸ்ஸியை ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையை வென்று தந்த மெஸ்ஸிக்கு போட்டியை நடத்திய கத்தார் அணி தங்களது நாட்டு பாரம்பரியப்படி ஷேக்குகளுக்கான ஆடையை அணிவித்து அவரது கைகளில் உலகக்கோப்பையை வழங்கினர். உலகக்கோப்பையை பெற்றுக்கொண்ட மெஸ்ஸி ஒரு குழந்தையை தூக்கிச் செல்வது போல, அந்த கோப்பையை மெல்ல மெல்ல தூக்கிச்சென்று தனது அணியினருடன் ஒன்றாக நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், தங்கப்பந்து விருதை வென்ற பிறகு பரிசளிப்பு மேடையில் இருந்து கீழே இறங்கிய மெஸ்ஸி உலகக்கோப்பைக்கு ஒரு குழந்தைக்கு கொடுப்பது போன்று முத்தம் கொடுத்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: FIFA WORLDCUP 2022: இறுதிவரை திக்..திக்..! பெனால்டி ஷூட் அவுட்டில் மிரட்டல்...! சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா..!
மேலும் படிக்க: Golden Boot: தோற்றாலும் வீரன் வீரனே.. கோல்டன் பூட் விருதை வென்றார் பிரான்ஸின் 'தங்கமகன்' எம்பாப்பே..!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -