மேலும் அறிய

TTV Dhinakaran: விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது - தவெக அரசை 'ரீல்' அரசு என கிண்டலடித்த டிடிவி தினகரன்

TTV Dhinakaran On CM Vijay: விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது - டிடிவி தினகரன்

ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து, ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதலமைச்சர் ஜோசப் விஜய் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அவரது பொதுமக்களுக்கும் அளித்துள்ளன.

 

அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் ஜோசப் விஜய், கொலை-கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், மருத்துவமனைகளில் நிலவும் அவலங்கள் போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்சினைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா? தவெகவுக்காக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் ஜோசப் விஜய் ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.

மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிந்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ? அதைத்தான் செய்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!

அதே நேரத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது என தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா? ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி
காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்
மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்
TTV Dhinakaran: விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது - தவெக அரசை 'ரீல்' அரசு என கிண்டலடித்த டிடிவி தினகரன்
விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது - தவெக அரசை 'ரீல்' அரசு என கிண்டலடித்த டிடிவி தினகரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget