காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி
செங்கம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை: செங்கம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 58 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிற்றுண்டி உணவு உட்கொண்டும் பொழுது 11 மாணவர்களுக்கு சில நிமிடத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உணவை பரிசோதனை செய்து பார்த்ததில் பல்லி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவை எடுத்து வெளியில் வீசிவிட்டு, பின்னர் மயக்கம் அடைந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்த ஜெகன் தனது கார் மூலம் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும் மருத்துவர்களிடம் குழந்தைகளின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவை தீவிர கண்காணிப்போடு பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 11 மாணவர்கள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கம் அடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















