திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு நாளை ( டிசம்பர் 8 ) முதல் டிசம்பர் 16 வரை என 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் அதன் அருகில் உள்ள 156 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: TN Rain: உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 7 நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் கனமழை ?
கார்த்திகை தீப விழா:
கார்த்திகை மாதம் என்றாலே தீபங்கள்தான்,நம் நினைவிற்கு வரும். இந்நிலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி தெய்வங்களை வழிபடுவது வழக்கம். கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழ் மக்கள் தமது வீடுகளில் மற்றும் கோவில்களில் பிரகாசமாக தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடக்கூடிய தீப திருநாள்தான், கார்த்திகை தீப திருநாளாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகளில் விளக்கேற்ற தொடங்கிவிடுவார்கள். கார்த்திகை மாதம் முழுவதும், சில வீடுகளில் தீப ஒளியாகத் தெரியும். இதனால் நம் இல்லங்களில் மகாலெட்சுமி குடியேறுவார் என்பது மக்களின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது
எங்கெல்லாம் வீடுகளில் விளக்குகளை ஏற்றவது வழக்கம் தெரியுமா?
1. சமையல் அறைகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
2. வீடுகளில் துளசி செடி நெல்லி, மாதுளை செடிகள் இருந்தால், அதில் விளக்குகளை ஏற்றலாம். இவையெல்லாம் மகாலெட்சுமியின் அம்சங்களாகப் பார்க்கப்படுவதால் இச்செடிகளில் அனைத்தும் விளக்குகளை வைத்து வழிபட்டால், மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது
3.வீட்டின் மாடிப்படிக்கட்டுகளில் ஏற்றலாம்; வீடு முழுவதும் விளக்குகள் போடும் போது நமக்கு பாசிடிவ் எனர்ஜி இதன் மூலம் பெறப்படுகிறது என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்
4. விளக்குகளால் பார்ப்பதற்கும் அழகாகவும் தெரியும்; தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் அல்லது குத்துவிளக்குகள் கொண்டு தீபம் ஏற்றலாம். மேலும் அழகான கோலமிட்டு மையததில் விளக்கை ஏற்றலாம் எனவும் கூறப்படுகிறது.