மேலும் அறிய

Tiruvannamalai : திருவண்ணாமலை தீபம்: பக்தர்களின் வசதிக்காக மாபெரும் ஏற்பாடுகள்! அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆன்மீக மக்கள் எதிர்பார்ப்பதை விட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தீபத் திருவிழா நடைபெறும்

திருவண்ணாமலை : தீபத் திருவிழாவிற்காக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட வரும் அனைத்து வசதிகளையும் மாடவீதி கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். திராவிட மாடல் ஆட்சியை ஆன்மீக பக்தர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர், 2026ல் திராவிட மாடல் ஆட்சி அமையும் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம், ஆன்மீக மக்கள் எதிர்பார்ப்பதை விட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தீபத் திருவிழா நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 3ம் தேதி காலை அண்ணாமலையார் திருக்கோவில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மும்மரமாக செய்யப்பட்ட வருகின்றன. 

இந்த நிலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று திருவண்ணாமலை மாடவீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்களுக்காக அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள இடங்கள், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்., திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாள் நேற்று திருத்தேர் ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும் ஆன்மீக பக்தர்கள் பலரும் திராவிட மாடல் ஆட்சியை பெரிதும் பாராட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.  தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்த மாத வீதியை சுற்றி கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்து நிலையில் திருத்தேர் ஊர்வலத்தில் பல 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசியவர் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை கூடி வருவதால் 24 தற்காலிக பேருந்து நிலையங்களும், 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகளும், 4864 சிறப்பு பேருந்துகளும் அமைக்கப்படும் என்றும் ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் கர்நாடக மாநிலத்திலிருந்து 100 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளதாகவும் அவர்களுக்காக தனித்தனி தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பக்தர்களின் வசதிக்காக அனைத்து இடங்களிலும் குடிநீர் வசதிகளும், மருத்துவ வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமம் என்று செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் 720 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் 38 இடங்களில் கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டு பேசினார். 

நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் வீதம் 14 கிலோ மீட்டருக்கு 14 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பக்தர்களுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி மாநகராட்சி சார்பிலும் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவரித்தார். 

தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து திருக்கோவில் வருவதற்காக 200 மினி பேருந்துகள் தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மினி பேருந்துகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் வசூல் செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர் ஆன்மீக பக்தர்கள் பலரும் எதிர்பார்ப்பதை விட சிறப்பான தீபத் திருவிழா நடைபெறும் என்றும் கூறிய அவர்  2026 ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமையும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget