இளம்பெண்ணை அரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம்
திருவண்ணாமலையில் ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறித்த கும்பல்.

திருவண்ணாமலையில் ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்த கும்பல் அப்பெண்ணை அரை நிர்வாணமாக்கி வீடியோ பதிவு செய்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் ஏரிக்கரையில் ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறித்த கும்பலில் சரித்திர பதிவேடு குற்றவாளி வாசுதேவன், சிவப்பிரகாசம், டேனியல்இசக்கி உள்ளிட்ட ஏழு நபர்களை திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் ஏரிக்கரையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த கும்பல் அவர்களை மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு பெண்ணை அரை நிர்வாணமாக்கி விடியோ பதிவு செய்து கொண்டு தாங்கள் எப்போது பணம் கேட்டாலும் தர வேண்டும் என மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் சரித்திர பதிவேடு குற்றவாளி வாசுதேவன், சிவப்பிரகாசம் மற்றும் டேனியல்இசக்கி உள்ளிட்ட ஏழு நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதற்கட்ட விசாரணையில் இந்த கும்பல் பல பெண்களிடம் இது போன்று அத்துமீறிய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஏழு நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் மூன்று நபர்களை கைது செய்து விசாரணை நடத்த இருப்பதாகவும் காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















