Continues below advertisement

திருவண்ணாமலை: கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே கனிமங்களை எடுத்து செல்ல வேண்டும் என்றும் விதிமீறல்கள் கண்டறியும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

Continues below advertisement

இயற்கை வளங்கள் துறை அமைச்சரின் உத்தரவுபெயரில் தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்தவும், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே குவாரி பணி செய்ய வேண்டும் என்றும் விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து குவாரி/கிரஷர் உரிமையாளர்கள் உரிமம் வழங்கப்பட்ட புலத்திலிருந்து கனிமங்களை வெட்டியெடுத்து வாகனங்களில் கொண்டு செல்ல இணைய வழியல் வழங்கப்படும் நடைச்சீட்டு (Despatch Slip) மற்றும் இடைகடவுச்சீட்டு (Transit Pass) ஆகிய Security Paper-களை கொண்டே வாகனங்களில் கனிமம் ஏற்றி செல்ல வேண்டும். மேலும், கனிமங்கள் கொண்டு செல்லும் அளவிற்கான நடைச்சீட்டு மற்றும் இடைகடவுச்சீட்டு வாகனங்களில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே வாகனங்களில் கனிமங்களை கொண்டு செல்ல வேண்டும்.

 

எனவே, கனிமங்கள் கொண்டு செல்லவதில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது நடைச்சீட்டிறின்றி எடுத்துச்செல்வது, அனுதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக கொண்டு செல்வது மேலும், குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் குவாரி செய்துவது என ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியும் பட்சத்தில் குவாரி /கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.