மகளிருக்கான திட்டங்கள் இந்த நிதியில் இருந்துதான் எடுக்குறாங்க - ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
பெண்களைப் பற்றி பொன்ராஜ் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது - ஏர்போர்ட் மூர்த்தி

ஏழாயிரம் கோடிக்கு மேல் பட்டியல் இன சமுதாய மக்களுக்கான நிதியை மாநில அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இந்த நிதியிலிருந்து தான் மகளிருக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது புரட்சித்தமிழகம் ஏர்போர்ட் மூர்த்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பட்டியல் மக்களின் நிதி திருப்பி அனுப்பப்பட்டது
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.5 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக மாற்றிய இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழகத்தை மிகுந்த நிதி நெருக்கடி மாநிலமாக திமுக மாற்றியுள்ளது என்றும், திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக பிற்படுத்த மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட ரூ.7838 கோடி நிதியை இந்த அரசு திருப்பி அனுப்பி உள்ளது என்றும், மகளிர் உரிமைத் தொகை மற்றும் தற்போது வழங்கப்பட்ட 5000 ரூபாய் திட்டங்களுக்கான நிதியை பட்டியியல் சமுதாய மக்களின் நிதியிலிருந்து இந்த அரசு எடுத்து கொடுத்துள்ளதாகவும், கல்விக்காக 2200 கோடி ரூபாய் நிதி வரவில்லை என தொடர்ந்து மத்திய அரசின் மீது மாநில அரசு குற்றம் சாட்சி வருவதாகவும், ஆனால் கண்களுக்கு தெரிந்து பட்டியல் சமுதாய மக்களுக்கான நிதியை இந்த அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக ஏர்போர்ட் மூர்த்தி குற்றம் சாட்டினார்.
புதிய தமிழகம் கட்சிக்கு 3 தொகுதிகள்?
மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறிப்பாக ஜல்ஜீவன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டதாக ஒரு பொய்யான தோற்றத்தை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது என்றும் மத்திய அரசின் நிதி இல்லாமல் எந்த ஒரு மாநில அரசும் இயங்க முடியாது என்றும், மாறாக மத்திய அரசு எந்த ஒரு நிதியையும் தரவில்லை என்ற ஒரு மாய தோற்றத்தை இந்த அரசு ஏற்படுத்தி வருவதாகவும், திமுகவை பற்றி குறை சொல்பவர்களைப் பற்றி பேசுவதற்காகவே திமுக கூட்டணியில் உள்ளவர்கள் உள்ளனர் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அரசாங்கம் தனது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் திமுக அரசு அதை செய்யவில்லை என்றும், இந்தியாவிலேயே தமிழகம் தான் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் மூன்றாவது மாநிலமாக உள்ளது என்றும் புரட்சித் தமிழகம் கட்சி என்டிஏ கூட்டணியில் மூன்று தொகுதிகள் கேட்டுள்ளதாகவும் விரைவில் எங்களுக்கு அது முடிவாகும் என்றும் தெரிவித்தார்.
விஜய் அரசியலில் நிலைக்க மாட்டார்
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஒரு பொய்யான மாயையை உருவாக்குகின்றார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் ஓரளவுக்கு வாக்குகளை பெறும் என்றும் அதற்கு அடுத்து வருகின்ற தேர்தலில் விஜய் அரசியலில் நிலைக்க மாட்டார் என்றும், த.வெ கவில் உள்ள பெண்களைப் பற்றி பொன்ராஜ் அவர்கள் கூறியது இழிவான ஒரு செயல் என்றும் இவர் திமுகவுடன் இருப்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் இதுபோன்ற செயல்கள் பொது வழியில் பேசுவது என்பது இழிவான ஒன்று என்றும் சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறினார்.
கடந்த தேர்தலில் திமுக அரசு அறிவித்த பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை திமுக அரசு செயல்படுத்தாமல் உள்ளது. திமுக அதிமுக ரகசிய கூட்டணி அமைத்துள்ளதால்தான் கூட்டணி கட்சிகளுக்கு பல தொகுதிகளை ஒதுக்கி உள்ளார்கள் என்றும் என்ற குற்றச்சாட்டுக்கு அது அவருடைய கருத்து என்றும் நாம் அதற்கு பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தவர் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்கு பல்வேறு சிக்கல்கள் அனைத்து அணியிலுமே உள்ளது என்றும் இதை குறை சொல்ல முடியாது என ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















