Cheyyur-Vandavasi-Polur : 100 கிலோமீட்டர் வேகம்.. செய்யூர்- வந்தவாசி -போளூர் சாலை.. ரூ.1141 கோடியில் கிடைத்த அதிசயம்..
Cheyyur-Vandavasi-Polur Road: "வந்தவாசி வழியாக செய்யூர் முதல் போளூர் வரை சுமார் 1141 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது"

Chennai kanyakumari Industrial Corridor Project: "செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை இணைக்கும் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை பொதுமக்கள் பயன்பாட்டு வந்துள்ளது "
பொருளாதாரத்தை உயர்த்தும் சாலை வசதிகள்:
ஒரு நாடு மற்றும் ஒரு மாநிலம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், சாலை வசதிகள் என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த மே மாதம் 2021 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16,421 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கன்னியாகுமரி தொழிற்பேட்டை சாலை திட்டம் - Chennai Kanyakumari Industrial Corridor Project- CKICP
சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சென்னை முதல் கன்னியாகுமரி 20 மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இவை மாநிலத்தின் மக்கள்தொகையில் 70 சதவீதத்தையும், GSDB-ல் 74 சதவீதத்தையும் உள்ளடக்கியுள்ளது. சென்னையின் முக்கியசாலியாக உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலை, தற்போது தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Kash Patel: அடேங்கப்பா..! அமெரிக்கா உளவுத்துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம் - யார் இந்த காஷ் படேல்?
செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை- Cheyyur - Vandavasi - Polur Road
செய்யூர் முதல் பனையூர் இணைப்புச் சாலை மற்றும் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் 1141 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலை முழுவதும், மழைநீர் வடிகால்வாய்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Chennai Tirupati NH: குறுக்கே வந்த 18வது கோயில், அகற்றப்படுமா? சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் தொடருமா?
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features
சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 7 ஆண்டுகளுக்கான சாலை முழுமையாக பராமரிக்கும் பணியும் நடைபெற உள்ளது. இத்திட்டச் சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை (Chennai ECR ROAD), சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை (Chennai -Trichy Highway - GST ROAD) மற்றும் விழுப்புரம் – மங்களூரு (villupuram to Mangalore road) தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது.
மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் செல்லும் கனரக வாகனங்கள், இந்தப் புறவழிச் சாலை மூலம் பயணிப்பதால் நகர் பகுதிகளில் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும். இதன் மூலம் பயண நேரம் குறையும்.
செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்லவும், அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும்.