திருநெல்வேலி இளைஞர்களே, ராணுவத்தில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
அக்னிவீா் திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கு இந்திய இராணுவத்தில் சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாளாகும்.
அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டதின் கீழ் பல இளைஞர்கள் பணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
அக்னிவீா் திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கு இந்திய இராணுவத்தில் சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். அக்னிவீா் திட்டத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் சோ்வதற்கு இளைஞா்களை தயாா்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெற்றி நடை முகாம் நடைபெறுகிறது.
இதில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையலாம். அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர 1.7.2005 முதல் 1.7.2009-க்குள் பிறந்திருக்க வேண்டும். 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும்.உடல் தகுதி, தோ்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான தோ்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. எழுத்து தோ்வை தமிழிலும் எழுதலாம். மேலும், விவரங்களுக்கு 9952594351 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தால் அனைத்து வட்டங்களிலும் இத்தோ்வுக்கென நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சியில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















