கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீனவர் வலையீல் சிக்கிய 2-டன் எடை 10-அடி நீளம் கொண்ட அரிய வகை "திமிங்கல சுறா"வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றதோடு சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடி புகைப்படம் எடுத்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மெல்பின்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பனையின் மற்றொரு கொடை மருத்துவ குணம் மிக்க `தவுண்’ - சாயல்குடி பகுதியில் விற்பனை மும்முரம்


இவர் தனது பைபர் படகில் சக மீனவர்கள் 3 பேருடன் குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் வந்த ராட்சத சுறா மீன் அவர்களின் பைபர் படகை மோதி தாக்கி உள்ளது இதில் மீனவர்கள் நிலை தடுமாறிய நிலையில் அந்த சுறா மீன் மீனவர்கள் விரித்திருந்த வலைக்குள் சிக்கி கொண்டது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video : திருப்பூர் அருகே 7 பேரை தாக்கிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது


 



ராட்சத சுறா என்பதால் பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலையில் வலையோடு இழுத்தபடியே மீனவர்கள் பைபர் படகை ஓட்டி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.பின்னர் விசைப்படகில் உள்ள கிரேன் மூலம் கரை சேர்த்த நிலையில் அந்த சுறா மீன் 10 அடி நீளமும் 2 டன் எடையும் கொண்ட அரிய வகை "திமிங்கில சுறா" என்பது தெரிய வந்தது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு


இந்த சுறா மீனை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்ற நிலையில் சிறுவர்கள் அதன் மீது ஏறி அமர்ந்து விளையாடியும் புகைப்படம் எடுத்தும் சென்றனர். பைபர் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஒரு நாள் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வரும் நிலையில் இன்று அந்த பைபர் படகில் சிக்கிய ஒத்த சுறா ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை போனதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மீனவர் வலையில் சிக்கிய கத்தாழை மீன்கள் - ஆண்மை குறைவுக்கு மருந்தாக பயன்படும் என்பதால் 70 லட்சத்துக்கு ஏலம்