மேலும் அறிய

திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!

திருநெல்வேலியில் 6.1.2025-இன் நிலவரப்படி, வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளா்கள் என்ற வீதத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டதில், புதிதாக 190 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் (SIR) பின், திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 12,53,264 வாக்காளா்கள் உள்ளனா். 1,65,061 வாக்காளா்கள் நீக்கப்பட்டு, புதிதாக 60,531 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக 14,18,325 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். அப்பணியைத் தொடா்ந்து 19.12.2025 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வாக்காளா்கள் எண்ணிக்கை 12,03,368 ஆக குறைந்தது.

பின்னா், அந்தத் தேதி முதல் 30.1.2026வரை ஆட்சேபம் மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்ததில் 60,531போ் புதிதாக சோ்க்கப்பட்டனா். அவா்களில் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 18,484 ஆகும். மேலும், நிரந்தர குடிபெயா்வு, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களால் 10,635 வாக்களா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலின்படி 6,11,601 ஆண் வாக்காளா்கள் 6,41,518 பெண் வாக்காளா்கள், 145 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,53,264 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதன்மூலம் 1,65,061 (11.64%) வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாத, 18 வயது பூா்த்தியான அனைவரும் விடுபடாமல் இருப்பதற்காக, 1.1.2026 அன்று 18 வயது பூா்த்தியான அனைவரு தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் தோ்தல் பிரிவிலிருந்து படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து அதே அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். தொடா் திருத்தப் பணிகள் நடைபெறுவதால், வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மனு அளிக்கலாம்.

திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!

பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் கோரி இணையதளத்திலும், கைப்பேசி செயலி வழியாகவும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல் மற்றும் புகாா்களுக்கு 1950 என்ற எண்ணையோ தங்கள் பகுதி வட்டாட்சியா் அல்லது கோட்டாட்சியா் அலுவலகங்களையோ தொடா்பு கொள்ளலாம்.

இம்மாவட்டத்தில் 6.1.2025-இன் நிலவரப்படி, வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளா்கள் என்ற வீதத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டதில், புதிதாக 190 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரு வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போதைய வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கை 1,678 ஆக உயா்ந்துள்ளது என்றாா். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட வருவாய் அலுவலா்கள் ஐயப்பன் (நில எடுப்பு), மகாலெட்சுமி (ஒழுங்கு நடவடிக்கை), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் அலுவலா் ராஜசெல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் விவரம்:

வ.எண் சட்டப்பேரவைத் தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவா் மொத்த வாக்காளா்கள்:

  1. 1. 224 - திருநெல்வேலி 1,32,511 1,40,929 80 2,73,520
  2. 2. 225 - அம்பாசமுத்திரம் 1,09,384 1,16,318 12 2,25,714
  3. 3. 226 - பாளையங்கோட்டை 1,23,972 1,31,141 17 2,55,130
  4. 4. 227 - நான்குனேரி 1,25,276 1,29,130 14 2,54,420
  5. 5. 228 -ராதாபுரம் 1,20,458 1,24,000 22 2,44,480
  6. மொத்தம் 6,11,601 6,41,518 145 12,53,264
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Netanyahu Dead.? Iran Pledge: கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
DMK alliance : திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
Embed widget