அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வருகின்ற 16-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது, 17-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாட உள்ளார். இந்த நிலையில், வருகின்ற 16-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு இலத்தூர் விலக்கு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதற்கான ஆயத்தப் பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், 16-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சசிகலா சென்று பொதுமக்களை சந்திக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், அதற்குன்டான அனுமதியையும் பெறுவதற்காக அதிமுக கழக நிர்வாகியான வழக்கறிஞர் பூசத்துரை தலைமையில், குத்துக்கல்வலசை செல்வம், சின்ன ஆணைக்குட்டி பாண்டியன், செந்தூர் பாண்டியன், ரமேஷ் பாண்டியன், சுந்தரராஜன், பண்பொழி பேரூர் உறுப்பினர் சுப்பையா கண்ணு, சுரேஷ், சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அவருடன், பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து தாங்கள் அளித்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவையான பாதுகாப்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்..