தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கையால் கடலுக்கு செல்ல தடை - தடையை மீறி 245 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள்

விசைப்படகு மீனவர்கள் வருகிற 18ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்க பட்டத்துடன் மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி 245 விசைப்படகுகளில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்.

Continues below advertisement


கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.


இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் நேற்று முன் தினம் நள்ளிரவு முடிவடைந்த நிலையில், கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள் மன்னர் வளைகுடா பகுதியில் ஜூன் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் மீனவர்கள் டீசல் நிரப்புதல், படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்ட போது இதனை தடுக்கவோ, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடவோ அதிகாரிகள் முன்வரவில்லை.


நேற்று இரவு மீன்வளத் துறையின் அறிவிப்புக்கு எதிராக கடலுக்குச் செல்வதற்காக விசைப்படகு மீனவர்கள் ஆயத்தமாகினர். அதை அடுத்து மீன்வளத் துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் விசைப்படகு மீனவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விசைப்படகு மீனவர்கள் வருகிற 18-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்க பட்டத்துடன் மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.  மொத்தம் 245 விசைப்படகுகளில் தடையை மீறி மீன்பிடிக்க சென்றனர்.

Continues below advertisement