தூத்துக்குடி மாவட்டத்தை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட 11 மாணவர்களை காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பிடித்து எச்சரித்து அறிவுரை கூறினர். இதையடுத்து தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்டு மாணவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தை குறிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் , வணிகவளாகம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காக்களில் தவறான செய்கைகளை காட்டி, மாவட்டத்தை தவறாக சித்தரித்து அவமதிக்கும் வகையில் சில மாணவர்கள் வீடியோ பதிவிட்டு அதனை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோ பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டரில் இப்பதிவை டேக் செய்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி 11 மாணவர்களை கண்டறிந்தனர்.


அவர்களை பிடித்து எச்சரிக்கை விடுத்தும், உரிய அறிவுரைகளை வழங்கியும் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் எனவும் கூறியும் அந்த மாணவர்கள் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதுபோன்று சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண