இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பு காலம் நடைபெற்று நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருகின்ற சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் அதற்கு ஆயத்தம் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக ஆடுகள் விற்பனை திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தையில் கலை கட்டியது. மேலப்பாளையம் சந்தைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் விற்பனைக்காக தங்களது ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக மேலப்பாளையம் சந்தையில் கடுமையான கூட்டம் அலைமோதியது.




குறிப்பாக சிறிய ரக ஆடுகள் 3000 தொடங்கி ஒவ்வொரு ஆட்டிற்கும் ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக 30 ஆயிரம் விலை வரைக்கும் ஆடுகள் விற்பனை ஆனது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக ஆடுகளும் இந்த முறை விற்பனைக்கு வருகை தந்த நிலையில் அந்த வகையான ஆடுகள் 8000 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையானது. காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் தரத்திற்கு ஏற்றார் போல் விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய அதிகமான இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடைபெற்ற இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், தென்காசி மாவட்டம் கடையம், ரெட்டியார்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கால்நடை சந்தைகள் நடைபெற உள்ள நிலையில் அங்கும் ஆடு விற்பனை கலை கட்டியது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண