கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலமாக 50 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு வாலிபரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் நொய்டா சென்று கைது செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிகாடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைன் பள்ளி வகுப்பில் இருந்த போது அவருக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் இ மெயில் அனுப்பி உள்ளார். அதில் அந்த பெண்ணின் கணவருக்கு புற்றுநோய் இருப்பதால் அவரது பேரில் உள்ள பல மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க உங்களை தேர்வு செய்துள்உள்ளோம் என அதில் தெரிவிக்க பட்டு இருந்தது. இதனை உண்மை என நம்பிய அந்த மாணவி அந்த பெண் கூறிய வங்கி எணுக்கு சிறுக சிறுக 51 லட்சம் ரூபாவை வழகி உள்ளார்.

 



 

இதற்கு இடையே பணத்தை திருப்பி கேட்டபோது ரிசர்வ் வங்கி பணத்தை வைத்துள்ளதாக போலியாக ஒரு கதை கூரவே அதிர்துபோன அந்த இளம் பெண் அவரது பாட்டி இடம் தான் ஏமாந்த தகவலை கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பாட்டி புகார் ஒன்றை அளித்தார் இதனையடுத்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் , இந்தப் பெண்மணி பணம் செலுத்திய வங்கி எண் , செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை கொண்டு போலீசார் குற்றவாளியை கண்டறிய முயற்சி மேற்கொண்டனர் அப்போது சம்பந்தப்பட்ட நபர் உத்திரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து டெல்லி விரைந்த கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் அங்கு பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த எபுகா பிரான்சிஸ் என்ற 28 வயது வாலிபரை கைது செய்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



 

விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது டெல்லியில் இது போன்று ஆன்லைன் மோசடி கும்பல் பல செயல்படுவதாகவும் வெளிநாட்டவர் மற்றும் வட இந்தியர்கள் சிலர் இந்த குற்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது மேலும் இந்த கும்பல் பல ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் இந்த நைஜீரிய வாலிபர் அமெரிக்காவில் வசிக்கும் பெண் என கூறி மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.