ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஐதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.

இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில். ஐதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.07193) சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் இந்த ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை இரவு 11.10 மணிக்கு ஐதராபாத் தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.22 மணிக்கு சேலத்துக்கும், 8.20 மணிக்கு ஈரோட்டுக்கும், 9.13 மணிக்கு திருப்பூருக்கும், 10.12 மணிக்கு போத்தனூருக்கும் வந்து சேரும்.
இதேபோல் கொல்லம்-ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.07194) வருகிற 6-ந் தேதி முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படும் திங்கட்கிழமைகளில் காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப் பட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு ஐதராபாத்துக்கு சென்றடையும். இந்த ரயில் திங்கட்கிழமைதோறும் மாலை 6.20 மணிக்கு போத்தனுருக்கும், இரவு 7.18 மணிக்கு திருப்பூருக்கும், இரவு 8.20 மணிக்கு ஈரோட் டுக்கும், இரவு 9.27 மணிக்கு சேலத்துக்கும் சென்றடையும்.

இதேபோல் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் (எண்.06030) வாராந்திர சிறப்பு ரயில் பழனி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனூர். கோவை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் வருகிற 5-ந் தேதி முதல் ஜூன் மாதம் 7-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறது. மேலும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06029) வருகிற 6-தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















