தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மேல செக்காரக்குடியில் உலகம்மாள் கோயிலுக்கு செல்லும் வழியில் இருபடி நிலை நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் ஆஷா, சம்லி மற்றும் வரலாற்று துறை முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு மாணவர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் மேலச்சக்கார கொடி சென்று நடுக்கடலை ஆய்வு மேற்கொண்டனர்இது போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நடு கல்லாகும்.சுமார் இரண்டு மீட்டர் உயரம் உள்ள இந்த நடுக்கல்லில் ஒன்றரை மீட்டர் அளவு பகுதி வெளியில் தெரிந்த வகையில் உள்ளது. முன் பகுதியில் இரு பெண் சிற்பங்கள் இரு ஆண் சிற்பங்கள் என நாலு சிற்பங்கள் உள்ளது.மேலிருந்து கீழாக முதல் உள்ள ஒரு பெண் சிற்பம் போருக்கு செல்லும் உடையில் வில் அம்பு விடுவது போல் உள்ளது.இரண்டாவது சிற்பத்தில் ஆண் சிற்பம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மன்னர் போரிடுவது போன்று உள்ளது. அதன் உயரம் 35 சென்டிமீட்டர் அகலம் 30 சென்டிமீட்டர் ஆக உள்ளது. வாலை கையில் ஏந்தி குதிரை மீது அமர்ந்துள்ள நிலையில் மன்னர் உள்ளார்.
மூணாவது சிற்பம் நாயக்கர் மன்னர் சிற்பமாக உள்ளது சுமார் 30 சென்டிமீட்டர் உயரமும் 25 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த சிலையின் கையில் வில் அம்பு கத்தி மற்றும் வாழேந்தி போர் புரியும் நிலையில் உள்ளது. நாலாவது பெண் சிற்பத்தின் உயரம் 30 சென்டிமீட்டர் உயரமும் 20 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த சிலையில் போருக்கு செல்லும் நிலையில் வாலை தரையில் ஊன்றியபடி பெண் சிற்பம் உள்ளது.நடுக்கலின் முன்பகுதி மேல் பகுதியில் செவ்வக வடிவில் குழி ஒன்று கல்லை தூண்களில் நிலை நிறுத்துவதற்கான காடி போன்ற அமைப்பில் உள்ளது. இந்த நடுக்கல்லானது 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டு சேர்ந்த படி நிலை கல். இந்த நடுக்கலில் ஒவ்வொரு படி நிலையிலும் ஒவ்வொரு செய்தியை சொல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
விஜயநகர மன்னர் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்கர் மன்னர் போரில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்து தனது மனைவிமார்களுடன் சிவலோகம் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபெற்ற சண்டையில் இருந்த மன்னருடன் அவரது மனைவிமார்களும் குதிரை மீதி ஏறி சொர்க்கலோகம் செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இவர்கள் இணைந்து இறைவனுக்கு பூஜை செய்வது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் அலுவலர் பிரசன்னாவிடம் கேட்டபோது, "பழங்காலத்தில் கணவன் இறந்தபின் அவரது உடலை எரிக்கும் போது அவரது மனைவிகளும் அவரோடு சிதையில் குதித்து வேறு விட்டுவிடுவார். இவ்வாறு உயிர் விடுபவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆற்றங்கரையிலோ அல்லது குளம் மற்றும் வாய்க்கால் கரையோரமாகவோ அவர்களுக்கு சதிக்கலை நட்டு வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபடும்போது சதியில் இறந்த பெண்ணின் தியாகத்தைப் போற்றும் விதமாக அவர்களை தீப்பாய்த்த அம்மன் என்றும் தீப்பாச்சி அம்மன் என்றும் வழிபடுவது வழக்கம், இதே போன்ற சிலைகள் தென்காசி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஓரமாக அதிகமாக காணப்படுகின்றன .
தொல்லியல் ஆராய்ச்சியாளர் சிவகளை மாணிக்கம் கூறுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு நடுக்கட்களையும் அரசு அருங்காட்சியகத்திலையோ அல்லது மேல செக்காரக்குடி பகுதியிலோ பாதுகாப்பாக வைத்து காட்சிப்படுத்த வேண்டு"ம் என்கிறார்.
செக்காரக்குடி வானம் பார்த்த பூமியாகும் இந்த பகுதியில் புஞ்சை பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன.குறிப்பாக கடலை எள் மற்றும் பயிர் வகைகள் அதிகமாக பயிரிடப்படுகின்றன.இங்கு விளையும் எள் மற்றும் கடலைகளில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக அதிகளவில் இந்த பகுதியில் செக்குகள் இருந்தன எனவே இந்த ஊர் செக்கு ஆலை குடி என கடந்த நூற்றாண்டுகளில் அழைக்கப்பட்டன.தற்போது செக்கு ஆலை குடி என்ற பெயருக்கு சாட்சியாக இன்னும் அந்தப் பகுதியில் செக்குகள் காணப்படுகின்றன.இது மருவியே இன்று செக்காரக்குடி என்று வந்தது என்கின்றனர்.