குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. முன்னதாக மாவட்ட வன அலுவலர் உட்பட 9 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது இதனால் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து வண்ணம் இருந்தது, இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டது .


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கன்னியாகுமரியில் 2 டன் எடையுள்ள திமிங்கல சுறாவை வேட்டையாடிய கடல் ராசா



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பனையின் மற்றொரு கொடை மருத்துவ குணம் மிக்க `தவுண்’ - சாயல்குடி பகுதியில் விற்பனை மும்முரம்


இந்த நிலையில் நேற்று 4970 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது இதில் 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  ஒரு வாரத்திற்குப் பிறகு கொரோனா தொற்று ஆயிரத்தில் இருந்து குறைந்தது மக்கள் மனதில் ஒரு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் திருவட்டார் பகுதியில் அதிகபட்சமாக 150 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது நகரப் பகுதிகளில் அதிகமாக இருந்த கொரோனா எண்ணிக்கை தற்போது குறைய துவங்கியுள்ளது. மேலும் மாவட்டத்தில் இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. களப்பணியாளர்கள் மூலமாகவும் தாலுகா வாரியாக வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு


மாவட்டத்தில் சுமார் 6,000 பேர் வீட்டு சிகிச்சையில் உள்ளனர் அவர்களை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது இதனை தொடர்ந்து அங்கு உள்ள அதிகாரிகளுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் மாவட்ட வன அலுவலர் உட்பட 9 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மாவட்ட வன அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video : திருப்பூர் அருகே 7 பேரை தாக்கிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது