காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நொச்சி குளத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன் கிராம ஊராட்சி தலைவர் வேலம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கிராமத்தின் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம வளர்ச்சி குறித்து அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசும் பொழுது, "காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைப்பெறுகிறது. ஆனால், காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது" என்றார்.
தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக 4 அணிகளாக உள்ளது. இருவரும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் ஒருவருக்கு ஆதரவு என்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஒருவருக்கு ஆதரவு என்கின்றனர். இதனையெல்லாம் தாண்டி தேர்தல் ஆணையம் ஒன்று உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு முடிவு சொல்லக்கூடிய இடம் தேர்தல் ஆணையம் தான். அதிமுக பிளவால் எந்த பிரச்சனையும் சட்டப்பேரவையில் வராது. இந்த மாதம் கூட இருக்கும்.
சட்டப்பேரவை கூட்டத்தின் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். திமுக அரசின் நல்ல திட்டங்களை செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்களின் சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவது கூட ஊடகங்களில் பெரிதாக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை என தெரிவித்தார்.
நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதில் கொண்டே ஜேபி நட்டா படிப்பறிவில்லை என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பட்டதாரிகள் சராசரி 24% என்றால் தமிழகத்தில் 51% ஆக உள்ளது. ஜே.பி நட்டா எங்களை விட எங்கள் மாநிலத்தை விட அதிகம் படித்தவர் என அவரை நான் மதிக்கிறேன்.
மதுரையில் 95 % மருத்துவ பணிகள் எய்ம்ஸ் மருத்துவமனையில் முடிவடைந்தாக ஒரு கிரவுண்டை காட்டி சொன்னார்கள். அங்கு 5% பணி முடிந்த உடனே நாம் எல்லோரும் மருத்துவம் பார்க்க செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். எனவே திட்டமிட்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நல்லாட்சி நடப்பதை கொச்சை படுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். இது திராவிட பூமி. 1921 இல் இருந்து நீதிக்கட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை எல்லா மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஆட்சி நடக்கிறது. அதனை கொச்சைப்படுத்த நினைக்கிறார்கள். ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிது படுத்தாமல் அரசின் திட்டங்களை சிறப்பாக செய்ய ஆலோசனை வழங்குகள் என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்