Tuticorin Prisoner Death: தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் காவல்துறையால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Continues below advertisement

தூத்துக்குடி டிஎஸ்பி விளக்கம்:

தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். அதன்படி, காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இளைஞரை தாக்கிய காவலர்கள்?

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 26 வயதான நபர் அருணாச்சலம். அங்குள்ள ஒயின்ஷாப் மற்றும் பாரை ஒட்டிய பணிகளை செய்து வந்துள்ளார். அந்த டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, கடையை மூடிய பிறகு கூடுதல் விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலத்தை கடந்த 17ம் தேதியன்று கைது செய்த தென்பாகம் காவல்துறையினர், அவரிடமிருந்து 120 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது 4 காவலர்கள் அருணாச்சலத்தை தாக்கியதாகவும், அதனால் தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை பலனின்றி இளைஞர் மரணம்..

தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அருணாச்சலத்தி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணைக்காக அழைத்து சென்றபோது உடலில் எந்தவித காயங்களும் இல்லாமல் இருந்த அருணாச்சலத்தின் உடலில், சில மணி நேரங்களிலேயே இவ்வளவு காயங்கள் வந்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து உரிய பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார். இதையடுத்து காவலர்கள் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துவிட்டதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்

அருணாச்சலம் பேசும் வீடியோ வைரல்

இதனிடையே, சிகிச்சையின் போது அருணாச்சலத்திடம் பேச்சு கொடுத்தபடி உறவினர் எடுத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், “போலீசார் தன்னை தாக்கிய உடன் தனக்கு வலிப்பு ஏற்பட்டதாக” பேசி இருப்பது பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல என தூத்துக்குடி நகர டிஎஸ்பி சுனில் விளக்கமளித்துள்ளார்.