விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
தூத்துக்குடியில் நில மோசடி புகாரில் தவெக நிர்வாகி மனைவியுடன் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு.

வங்கிக்கடனில் இருந்த நிலத்தை மீட்டுத் தருவதாக கூறி ரூ.72 லட்சம் பண மோசடி செய்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தவெக நகரச் செயலாளர் ராஜா மனைவியுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏரல் பகுதியின் நகரச் செயலாளராக இருக்கிறார். இவர், தனக்கு சொந்தமான இடத்தை வங்கியில் வைத்து பணம் பெற்று இருக்கிறார். இதனிடையே, பணத்தை கட்டத்தவறியவர்களின் இடம் ஏலம் விடப்படும் என்று வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏரலில் ஜவுளிக்கடையில் பணிபுரியும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பாபு என்பவர், ரூ.72 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தி ராஜாவின் இடத்தை மீட்க உதவியுள்ளார். அந்தப் பணத்திற்காக அந்த இடத்தை பாபுவிடம் விற்பனை செய்ததாக ராஜா சொன்னதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, நிலத்தை எழுதி கொடுக்கும்படி பாபு கூறியுள்ளார். ஆனால், ராஜா முறையாக பதில் அளிக்காமல் அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார். சுமார், ஒரு வருடமாக தலைமறைவாகி இருந்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன்,நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊர் திரும்பிய ராஜா, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் உடன் இணைந்து கட்சி பணி செய்து வந்துள்ளார். அதன்பிறகு, பாபு தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, வாங்கிய பணத்தையும், நிலத்தையும் தம்மால் கொடுக்க முடியாது என்று ராஜா மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நிலம் தொடர்பாக பாபு, ஏரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, ரூ.72 லட்சம் ரூபாய் நிலம் மோசடி சம்பவம் என்பதால், இந்த வழக்கு தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா மற்றும் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக ஆட்சி அமைந்த உடன் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறது. மேலும், குற்றத்தில் ஈடுபட்டுவர்கள் சிலர் தவெக உறுப்பினர்களாக இருந்ததால் அக்கட்சியின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















